சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வந்த பூக்கள் மீதம் இருந்ததை வியாபாரிகள் சாலையில் கொட்டி சென்றுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு பனியன் நிறுவனங்கள் மற்றும் வீடுகள் உள்பட பல பகுதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுள்ளது. இதில் பூஜைகளுக்கு பூக்கள் உள்பட பல பொருட்களை பயன்படுத்தி உள்ளனர். இந்நிலையில் ஆயுதபூஜைக்கு பனியன் நிறுவனங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. அதன்பின் வீடுகளிலும் தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்று இருக்கிறது.
பின்னர் இங்கிருந்து அகற்றப்படும் கழிவுப் பொருட்கள் பல பகுதிகளில் இருக்கும் குப்பை தொட்டிகளில் போடப்பட்டிருக்கிறது. இதனால் அங்கு கழிவுகள் மலைபோல் உயர்ந்த நிலையில் காணப்படுகிறது. இதில் பொதுவான இடங்கள் மற்றும் ஒதுக்குப்புறமான இடங்களிலும் கழிவுகள் கொட்டப்பட்டு இருக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மற்றும் துர்நாற்றம் வீசி வருகிறது.
இதனைத் தொடர்ந்து ஆயுத பூஜைக்காக செவ்வந்திப் பூக்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இதில் திருப்பூர் மார்கெட்டிற்கு அதிகமான பூக்கள் கொண்டு வரப்பட்ட நிலையில் விற்பனை ஆகாதததை வியாபாரிகள் சாலையோரத்தில் கொட்டி சென்றுள்ளனர். மேலும் இம்மாநகரத்தில் பல பகுதிகளில் கழிவு பொருட்கள் தேங்கி கிடப்பதால் அதை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.