Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தலையில் அடிச்சு உடைச்சிட்டாங்க…. ரகளை செய்த வாலிபர்கள்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

டாஸ்மாக் கடை விற்பனையாளரை மது பாட்டிலால் தாக்கி தப்பி ஓடிய 3 வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. அந்தக் கடையில் பில்லூரில் வசிக்கும் பார்த்திபமூர்த்தி என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் டாஸ்மாக்கிற்கு 3 வாலிபர்கள் மது பாட்டில் வாங்க சென்றுள்ளனர். அப்போது விற்பனையாளர்களிடம் அந்த 3 வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டனர். அப்போது மது வாங்க வந்த 3 வாலிபர்களும் பார்திபமூர்த்தியின் தலையில் பாட்டிலால் அடித்து உடைத்தனர்.

இதனால் பார்த்திபமூர்தியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. அதன்பின் அந்த மூன்று வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து பார்த்திபமூர்த்தியை அந்த கடையில் வேலை பார்க்கும் மற்ற ஊழியர்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பார்த்திபமூர்த்தியை தாக்கிய 3 வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |