Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

5 ஏக்கர் நிலத்தில் சாகுபடி…. விற்பனையாளர்கள் வாங்க வரல…. கவலையில் விவசாயிகள்….!!

கொரோனா ஊரடங்கு காரணமாக விவசாயிகள் சாகுபடி செய்த பூசணிக்காயை விற்பனையாளர்கள் வாங்க வராததால் அழகி சேதமடைந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நல்லூர், காரணை, அமைப்பாக்கம், கடம்பாடி, வடகட்பாடி, குன்னத்தூர் போன்ற கிராமங்களில் வசிக்கக்கூடிய விவசாயிகள் 5 ஏக்கர் விளைநிலங்களில் பூசணிக்காய் சாகுபடி செய்துள்ளனர்.ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கின்றது.

அதன்படி மளிகை, காய்கறி கடைகள் அடைக்கப்பட்டு இருக்கின்றது. இதனால் விற்பனையாளர்கள் பூசணிக்காய் வாங்குவதற்கு முன்வராத காரணத்தினால் விவசாயிகள் அதனை விற்க முடியாமல் விளைநிலங்களில் அழுகி சேதமடைந்துள்ளது.

Categories

Tech |