விருச்சிகம் ராசி அன்பர்களே…!! இன்று தைரியத்தோடு செயல்படவேண்டிய நாளாக இருக்கும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது சிறப்பு. தடைகளை முறியடிப்பீர்கள். தனவரவு போதுமானதாக இருக்கும். நூதன பொருட்களின் சேர்க்கை உண்டாகும். இன்று வீண் செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் வரவும் இருக்கும். பயணங்கள் மூலம் அலர்ஜி போன்றவை உண்டாகலாம்.
கனவுகளால் தொல்லை ஏற்படும். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழலில் இருக்கும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் ஏற்பட்டு விலகி செல்லும், கவனமாக இருங்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் கொஞ்சம் கெடுக்கும்.குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன் முகம் கொடுத்துப் பேசுவார்கள். இன்றைய நாள் ஓரளவு சிறப்பாக இருக்கும்.
இன்று முக்கியமான பணியை மட்டும் நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பழுப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் :ஆரஞ்சு மற்றும் பழுப்பு நிறம்