விருச்சிக ராசி அன்பர்கள்,
இன்று தாராளமாக செலவிட்டு மகிழும் நாளாக இருக்கும். பணிகள் துரிதமாக நடைபெறும், உத்தியோகத்தில் உயர்வுகள் வருவதற்கான அறிகுறிகள் தோன்றும். இன்று எதிர்ப்புகள் நீங்கும், நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்கள் கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது வெற்றி தர உதவும்.
பொருளாதாரத்தில் பிரச்சினை எதுவுமில்லை, இருந்தாலும் மருத்துவச் செலவு வந்து செல்லும் பார்த்துக்கொள்ளுங்கள். வீண் விரயச் செலவுகளை தயவுசெய்து தடுப்பதற்கு முயற்சி செய்யுங்கள். கடந்த காலத்தில் உங்களை விட்டு சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பு கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெளியூர் பயணங்களில் உன்னதமான நிகழ்வுகள் நடக்கக்கூடும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமல்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்