Categories
இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு.. அனுசரித்து செல்லுங்கள்..வளர்ச்சி பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே இன்று நினைத்தது நிறைவேறும் நாளாகத்தான் இருக்கும். தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக் கொள்ளக் கூடிய சூழலும் இருக்கும். வங்கிகளில் உங்களுடைய சேமிப்பும் உயரும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். இன்று ஒரு சில விஷயங்களில் மட்டும் கவனத்துடன் நீங்கள் செய்யவேண்டும் , கையாளவேண்டும்.

வீண் அலைச்சலை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். பயணங்களின் போது எச்சரிக்கையாக இருங்கள், தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் வருமானத்திற்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. வாடிக்கையாளர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து, அனுசரித்து போங்கள்.

உத்தியோகத்திலிருப்பவர்கள் கூடுதல் பணியை கவனிக்க வேண்டியது இருக்கும். உடல் நலனில் கொஞ்சம் அக்கறையுடன் நடந்து கொள்ளுங்கள். மேல் அதிகாரிகளிடமும், சக பணியாளர்களிடம், அனுசரித்துச் செல்லுங்கள். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள், சரியான உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.

இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கடினப்பட்டு படியுங்கள், படித்ததை எழுதிப் பாருங்கள். இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை:-தெற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் இளம் பச்சை

Categories

Tech |