விருச்சிகம் ராசி அன்பர்களே.! பெரிய பிரச்சனைகள் எதுவும் இருக்காது.
இன்று மனதில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். அனைவரின் ஆதரவும் இன்று பரிபூரணமாக இருக்கிறது. வீண் அலைச்சல் குறைந்துவிடும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் வல்லவர்களாக இருப்பீர்கள். மனதில் துணிச்சல் இருக்கும். புத்தி சாதுர்யத்துடனும் புத்திக்கூர்மையுடனும் எதிலும் ஈடுபடக்கூடிய தன்னம்பிக்கையும் உங்களிடம் இருக்கின்றது. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கின்றது. பழைய பாக்கிகள் கூட நல்ல விதத்தில் வசூலாகிவிடும். பெரிய பிரச்சினைகள் ஏதுமில்லை.
இன்று குடும்பத்தைப் பொறுத்தவரை பிரச்சினை இல்லாமல் மனதிற்குள் சந்தோஷம் ஏற்படக்கூடிய நாள். கவலையை விட்டுவிட்டு கவனமாக இருப்பீர்கள். காதலில் உள்ளவர்களுக்கு இன்பம் பொங்கி மனதிற்குள் சந்தோஷம் பிறக்கும். இன்று மாணவர்களுக்கு துணிச்சல் கூடும். கல்வி பற்றிய அக்கறை இருக்கும். கல்வியில் நாம் சாதிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் போது இளம் பச்சை நிறத்தில் ஆடையை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் நீங்கள் செய்து வந்தால் வெற்றி நிச்சயம்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் வெள்ளை