விருச்சிக ராசி அன்பர்கள், இன்று உங்களுடைய சுய திறமையை வளர்த்துக் கொள்வீர்கள் பொது விஷியங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். இஷ்ட தெய்வ அருளால் தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும் , வியாபாரம் செழிக்கும். பண பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், கூடுதல் சொத்துக்களை வாங்க திட்டமிடுவீர்கள்.
இன்று பிள்ளைகளின் வளர்ப்பின் மீது கவனம் இருக்கட்டும் , உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும், மாத்திரை செலவினங்கள் குறையும். அதாவது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை, உற்சாகமாக காணப்படுவீர்கள்.கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும், இருந்தாலும் கவனமாக இருங்கள், வீண் வாக்குவாதம் அவர்களிடம் செய்யாதீர்கள்.
நண்பர்கள் மூலம் அனுகூலம் இன்று ஏற்படும், இன்றைய நாள் தொட்டது தொலங்க கூடிய நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கொடிய அளவில் இருக்கும், அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்:4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு