Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு..உதவிகள் கிடைக்கும்…மதிப்பு கூடும்..!!

விருச்சிக ராசி அன்பர்கள், இன்று  அக்கம் பக்கத்தினர் அன்பு பாராட்ட கூடும்,  தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணியில் ஈடுபடுவீர்கள், வருமானம் திருப்திகரமாக இருக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவார்கள். பெற்றோரின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள். இன்று  எதிலும் முன்னேற்றம் காணப்படும்.

விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள், முக்கிய நபர்களின் அறிமுகமும், உதவியும் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும், மரியாதை கூடும்,  திட்டமிட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த படி சிறப்பாக நடக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி ஏற்படும்.

மனதில் தன்னம்பிக்கை கூடும், துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள், வீண்  செலவுகள் மட்டும் அவ்வப்போது வந்து செல்லும், பார்த்துக்கொள்ளுங்கள். இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது காவி  நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், காவி  நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் இன்று  சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு  காரியத்தில் ஈடுபடுங்கள்,  அனைத்துக் காரியமும் நல்ல படியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் காவி

Categories

Tech |