Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு.. அலைச்சலை கொடுக்கும்.. உதவிகள் கிடைக்கும்..!!

விருச்சிக ராசி அன்பர்களே, இன்று இடையூறுகள் செய்தவர்களை அடையாளம் காண்பீர்கள், புதிய முயற்சி ஓரளவு நன்மை கொடுக்கும். தொழில் வியாபாரம் தாமத கதியில் இருக்கும் மிதமான அளவில் பணவரவு கிடைக்கும். தியானம், தெய்வ வழிபாடு, மனம் அமைதி பெற உதவும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டியிருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவு கொஞ்சம் இருக்கும்.

பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு  மேல் அதிகாரி கூறும்  படி நடந்து கொள்வது நன்மையை கொடுக்கும். நிலுவையில் உள்ள பணம் வசூலாகும். பழைய பாக்கிகள் இல்லம் தேடி வர கூடும்,  தாராள அளவிலே இன்று பணவரவு இருக்கும். இன்று காதல் கைகூடும் அளவிலே இருக்கும். இன்று  மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு, கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படுவீர்கள். இன்று ஆசியர்களின் முழு ஒத்துழைப்பு இருக்கும், சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை  கொடுக்கக் கூடிய அளவில்தான் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்ன  தானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் இருக்கலாம்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீலம்

Categories

Tech |