Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு… மனக்கலக்கம் உண்டாகும்…நிதானம் தேவை …!

 

விருச்சிகம் ராசி அன்பர்களே..!   இன்று எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி காண்பது ரொம்ப கடினம்தான். ருசியான உணவுகளை உண்டு மகிழ்ந்தவர்கள். இன்று சுகம் என்பது தேடவேண்டியதாக இருக்கும். தன லாபம் இருக்காது. கவனத்தை சிதறவிடாமல் நீங்கள் காரியத்தை கண்ணும் கருத்துமாக செய்யுங்கள் அது போதும். இன்று கூடுதலாக தான் நீங்கள் காரியங்களை செய்ய வேண்டியிருக்கும். அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம்.

புதிய முயற்சிகள் தள்ளிப் போடுவது ரொம்ப நல்லது. மனக்கலக்கம் உண்டாகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மற்றவர்களின் விமரிசனத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். அதனால் மற்றவர்களை பற்றி குறை சொல்லாமல் இருப்பது ரொம்ப நல்லது. கூடுமானவரை இன்று பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். காதலர்கள் எந்த காரணத்திற்காகவும் வாக்குவாதத்தில் மட்டுமே ஈடுபடவேண்டாம். அக்கம் பக்கம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.

இன்று வாடிக்கையாளர்களிடம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று குருபகவான் வழிபாட்டையும், சித்தர்கள் வழிபாட்டையே மேற் கொண்டு அனைத்து காரியங்களையும்  செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |