Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…உற்சாகம் அதிகரிக்கும்…பெரியோரின் ஆசிர்வாதம் உண்டு…!!

 

விருச்சிகம் ராசி அன்பர்களே..!  இன்றைய நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும். தொழில் ரீதியாக எடுத்த புதிய முயற்சி வெற்றியை கொடுக்கும்.மாமன், மைத்துனர் வழியில் மகிழ்ச்சி தர கூடிய தகவல்கள் வந்து சேரும். நண்பர்களுக்கு தொழில் முன்னேற்றத்திற்காக கைகொடுத்து உதவிகளை செய்வார்கள். புதிய வேலைக்கு செய்ய முயற்சிகள் நல்ல பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம், கவலைபடாதீர்கள் சரியாகிவிடும்.

கொடுத்த வேலைகளை நேரத்தில் செய்வது உகந்தது. கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் கருத்து வேற்றுமை நீங்கி மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். மனதில் புதிய தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும்.பொருளாதாரம் சார்ந்து நிறுத்திய விஷயங்களை மீண்டும் தொடர்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும்.இன்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் காரியத்தை மட்டும் செய்யுங்கள். பெரியோரின் ஆசி உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை உங்களுக்கு எப்பொழுதும் அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக  கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழ்வார்கள்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண் :7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் பச்சை

Categories

Tech |