விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று வசந்த காலத்திற்கு வழிகாட்டும் நாளாகவே இருக்கும், ஆரோக்கியம் சீராகி ஆனந்தத்தைக் கொடுக்கும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். பாக்கிகள் வசூலாகி பணவரவை கொடுக்கும். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும்.இன்று பணவரவு இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒருமுறைக்கு, இருமுறை யோசித்து செய்வது மட்டும் நல்லது.
முடிந்தால் பெரியோரிடம் கொஞ்சம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவுகளை மட்டும் எப்பொழுதுமே எடுக்காதீர்கள். வீண் வாக்குவாதங்களில் தயவுசெய்து தலையிடாதீர்கள். பஞ்சாயத்துகளிலும் நீங்கள் தலையிடாதீர்கள். பகையை வளர்த்துக் கொள்ளாமல் இன்று செயல்படுவது ரொம்ப நல்லது. இன்று இஷ்டதெய்வ அருள் உங்களுக்கு துணை நிற்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல சிறப்பை கொடுக்கும். விளையாட்டு துறையிலும் ஆர்வம் செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். எப்பொழுதுமே பழக்கமாக்கிக் கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலா
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் :வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்