விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும், நாளாக இருக்கும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். முன்கோபத்தை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். திடீர் பயணம் என்றால் வழக்கமான பணிகளில் கொஞ்சம் சுணக்கம் ஏற்படும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை கொடுக்கும்.
கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளுடைய விஷயத்தில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். தாய், தந்தையின் உடல்நிலையில் கொஞ்சம் எச்சரிக்கை அவசியம். இன்று நிதானத்தை கொஞ்சம் கடைபிடியுங்கள்.
யாரிடமும் எந்தவித வாக்குவாதங்களும் செய்ய வேண்டாம். அது மட்டுமில்லாமல் முற்றிலும் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். புரோஜனம் இல்லாத வேலையில் ஈடுபட்டு தேவையில்லாத நேரத்தை செலவழிக்காதீர்கள். இதில் கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரிய நமஸ்காரத்தை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடைபெறும்.
அதிஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்: 2 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்