Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…பழைய பாக்கிகள் வசூலாகும்.. மனக்கவலை நீங்கி நிம்மதி பிறக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று எவருக்கும் வாக்குறுதிகளை மட்டும் தரவேண்டாம், தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகும், தொந்தரவைக் கொடுக்கும். முக்கியமான செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். மனைவியின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கையை கொடுக்கும். சீரான ஓய்வு, உடல் நலத்தை பாதுகாக்க உதவும். இன்று தொழில் வியாபாரத்தில் நன்றாகவே நடக்கும்.

வாக்கு வன்மையால் லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலனைக் கொடுக்கும். வீண் செலவு மட்டும் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். மனதில் இருந்த கவலை நீங்கி நிம்மதி பிறக்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும்.

சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். ஆனால் மீண்டும் ஒருமுறை எவருக்கும் எந்தவிதமான வாக்குறுதிகளையும் கொடுக்க வேண்டாம். இன்று  மாணவச் செல்வங்கள் கல்விக்காக  கடுமையாகவே உழைப்பார்கள். உழைப்பது மட்டும் இல்லை நீங்கள் படித்த பாடத்தை தயவுசெய்து எழுதிப் பாருங்கள்.

எழுதிப் பார்ப்பது தான் மிகப் பெரியது, எழுதி பார்க்கும் பொழுது நினைவில் வைத்துக்கொள்ள உதவும். இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெளிர் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியம் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் மற்றும் நீலம்

Categories

Tech |