விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று சிவாலய வழிபாட்டை கொண்டு சிறப்பினை காணவேண்டிய நாளாகவே இருக்கும். புண்ணிய காரியங்களுக்கு செலவிட்டு மகிழ்வீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். அதிகாரிகளின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தும். இன்று எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செய்யுங்கள். பணவரவு ஓரளவு தாமதப்பட்டு தான் வந்து சேரும். எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்தோடு இருங்கள்.
எதிர்ப்புகள் ஓரளவு விலகிச்செல்லும், உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். பணம் எதிர்பார்த்தபடியே வந்து செல்லும். வெளியூர் பயணம் மகிழ்ச்சி கொடுப்பதாகவே அமையும். வெளியூர் பயணத்தின் பொழுது உடமைகளின் மீது கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று உற்றார் உறவினர்களின் வருகை இருக்கும், அதனால் செலவு கொஞ்சம் இருக்கும். யாரிடமும் கோபம் கொள்ளாமல் அன்பாக நடந்து கொள்ளுங்கள். அக்கம்பக்கத்தினர் அன்புத்தொல்லை உங்களுக்கு அதிகமாகவே இருக்கும்.
இன்று மாணவர்கள் முழுமூச்சுடன் பாடத்தை படியுங்கள், அதில் வெற்றியும் பெறுவார்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்,
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீலம் நிறம்