விருச்சிக ராசி அன்பர்கள், இன்று உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விருப்ப ஓய்வில் வெளிவரக்கூடிய சிந்தனை மேலோங்கும் நாளாக இருக்கும். இடம், பூமி வாங்கும் எண்ணம் வெற்றியை கொடுக்கும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவதை கண்டு ஆச்சர்யப்படுவீர்கள். இன்று மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்க மாட்டீர்கள். எதிலும் ஆதாயம் கிடைக்கும், பேச்சு திறமை அதிகரிக்கும், எதிர் பாலினத்தவரிடம் பழகும் போதும் மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும்.
நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும், வேலை பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டியிருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் வந்து வந்து சேரும். மேல் அதிகாரிகளின் உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். சக ஊழியர் மத்தியில் இருந்து வந்த எதிர்ப்புகள் விலகி செல்லும்.
இன்று மாணவர்களுக்கு கல்வியில் கொஞ்சம் சிரமம் இருக்கும், அதாவது பாடத்தை கொஞ்சம் கடுமையாக படியுங்கள், படித்ததை பாடத்தை எழுதிப் பாருங்கள், பாடத்தில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குங்கள் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்