Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு..முன்னேற்றமான சூழல் உருவாகும்..குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று எந்த ஒரு பிரச்சினையும் நீங்கள் சமாளித்து முன்னேறி செல்லும் நாளாக இருக்கும். ஒருமுக தன்மையுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தாமதமான பணி எளிதில் நிறைவேறும், தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக போட்டிகள் குறையும், வருமானம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் நல்ல செயல் மனதை வருடும் விதமாக இருக்கும். இன்று  குடும்பத்தில் உற்சாகம் பிறக்கும்.

மற்றவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள், கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலை காணப்படும். பிள்ளைகளால் மருத்துவ செலவு கொஞ்சம் ஏற்படும். பேச்சின் இனிமை சாதுரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். இன்று  கூடுமானவரை கொஞ்சம் நிதானத்தை மேற்கொள்ளுங்கள், அது போதும். யாரிடமும் எந்தவித வாக்குவாதங்கள் செய்யாதீர்கள்.

முக்கியமாக பெரியவர்களிடம் சில முக்கிய விஷயங்கள் ஆலோசனை கேளுங்கள் ஒன்றும் தவறு இல்லை. இன்று  காதல் கைகூடும் நாளாகத்தான் இருக்கும். இன்று மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். விளையாட்டு துறையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் வெள்ளை நிறத்தைக் கொடுக்கக்கூடிய சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

  அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்

Categories

Tech |