விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று தேவையற்ற கோபத்தால் குடும்பத்தில் சலசலப்பு ஏற்படும். மனைவியின் கழகத்தால் உறவுகள் கொஞ்சம் குழப்பம் இருக்கும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் அனுகூலம் ஏற்படும். இன்று புதிய நட்பால் மகிழ்ச்சி இருக்கும். பலவழிகளிலும் பணவரவு இருக்கும். காரியத்தடைகள் நீங்கும். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள்.
எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் இருக்கும். பெரியோர் மூலம் காரிய அனுகூலம் இருக்கும். பெரும் புள்ளிகளின் அறிமுகமும் இருக்கும். இன்று மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது மட்டும் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்கவேண்டும், பார்த்துக்கொள்ளுங்கள். பொறுமையை கடைபிடியுங்கள். மனம் கொஞ்சம் சஞ்சலப்படும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் கடுமையான உழைப்பும், கடுமையான ஆர்வமும் இன்று இருக்கும்.
அதற்கேற்றார் போல் இன்று உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வது நல்லது. விளையாட்டை தயவுசெய்து ஓரங்கட்டி விடுவது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்