Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! சிக்கனம் வேண்டும்….! வாக்குவாதங்கள் வேண்டாம்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! பண விஷயத்தில் சிக்கனத்தை பின்பற்ற வேண்டும்.

இன்று நண்பரின் அலட்சியமான பயிற்சிகள் உங்களுக்கு மன வருத்தத்தை கொடுக்கும். சில நேரங்களில் உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி விடும். மற்றவரிடம் கொஞ்சம் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும். வாக்குவாதங்கள் எதுவும் வேண்டாம். சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு வாழ கற்றுக்கொள்ள வேண்டும். தேவையில்லாத விவகாரங்களில் ஈடுபட்டு மனதை காயப்படுத்தி கொள்ள வேண்டாம். வாழ்க்கையில் நல்ல சிந்தனைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். முன்கோபத்தை தவிர்த்துக் கொள்ள வேண்டும். தொழில் வியாபாரம் நடைமுறைகள் தாமதமான வகையில் இயங்கும். பண விஷயத்தில் சிக்கனத்தை பின்பற்றவேண்டும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் பேச்சில் இனிமை சாதுரியமும் வேண்டும்.

வசீகரமான தோற்றமும் அழகான கண் பார்வையும் இருக்கும். கடல்தாண்டி வரக்கூடிய செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். பெண்கள் எதை செய்தாலும் நன்மை ஏற்படும். புதிய வாய்ப்புகளை பெண்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும். மாணவர்களுக்கு தைரியம் இருக்கும். கல்வி, விளையாட்டு இரண்டிலும் வெற்றி பெறக்கூடிய சூழல் இருக்கின்றது. மாணவர்கள் மனதிற்குள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு துணிச்சலுடன் எதிலும் ஈடுபடக் கூடியவர்களாக இருப்பார்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரியபகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்தஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:  1 மற்றும் 5                                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் மஞ்சள்

Categories

Tech |