விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாளாகவே இருக்கும். கட்டிய வீட்டை பழுது பார்க்கும் எண்ணம் மேலோங்கும். சகோதரர் வழியில் எதிர்பார்த்த நல்ல பலன் கிட்டும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் செலவுகள் கூடும். உங்கள் கீழ் வேலை செய்பவர்களின் செயல்களால் உங்களுக்கு கோபம் கொஞ்சம் ஏற்படும், நிதானமாக அவர்களிடம் பேசுவது நன்மையை கொடுக்கும்.
பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகம் தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்களிடம், மேலதிகாரிகள் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. இன்று கூடுமானவரை பொறுமையாக இருங்கள். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். இன்று மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது கூட கொஞ்சம் கவனம் இருக்கட்டும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். கல்வியில் ஆர்வம் செல்லும், விளையாட்டு துறையிலும் ஆர்வம் செல்லும்.
விளையாட்டை ஓரங்கட்டிவிட்டு பாடத்தை படிப்பது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்