Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு… எதிர்ப்புகள் நீங்கும்…குழப்பம் விலகும்…!

 

விருச்சிகம் ராசி அன்பர்களே..!  மதியத்திற்கு மேல் உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும் மனக் குழப்பம் விலகி தெளிவாக முடிவுகள் கிடைக்கும். பழைய நினைவுகளில் மூழ்கி  மகிழ்ச்சியடைவீர்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள், உங்களுடைய அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை நீங்கள் உணர்வீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் ஈட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். இன்று எதிர்ப்புகள் நீங்கும் நாளாகத்தான் இருக்கும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். இன்று கூடுதல் நேரம் உழைக்க வேண்டியிருக்கும். இன்று எந்த ஒரு விஷயத்திலும் நீங்கள் கவனமாக இருங்கள், தேவையான உதவிகள் மாற்றம் பெறும் பொழுது கொஞ்சம் கவனமாக இருங்கள். தயவுசெய்து இன்று எந்தவித அலட்சியம் காட்டாமல் செய்வது தான் மிகவும் சிறப்பு.

சகோதரர்களின் ஒத்துழைப்பும், குடும்பத்தாரின் ஒத்துழைப்பும்  பரிபூரணமாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே எந்தவித பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக செல்லும். இன்று காதலர்கள் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்கள் : 7 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |