விருச்சிகம் ராசி அன்பர்களே.! அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் வரும்.
இன்று அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும் நாளாக இருக்கும். தாமதப்பட்ட காரியங்கள் இன்று துரிதமாக நடக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு. எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் வேண்டும். வீண் செலவைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். சேமிப்பை அதிகப்படுத்த வேண்டும். எந்த ஒரு வேலையிலும் செய்து முடிப்பதில் இருந்த தடைகள் நீங்கிவிடும். வீண் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். எந்த வேலை செய்தாலும் மன திருப்தி ஏற்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். யாரையும் எதிர்த்து பேச வேண்டாம். யாரையும் கேலி கிண்டல் பேச்சுக்கு உள்ளாக வேண்டாம். விட்டுக் கொடுத்து சென்றால் மென்மேலும் உயரத்திற்கு சொல்லமுடியும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் வரும். உதவிகள் கிடைக்கும்.
ஆசைகள் நிறைவேறும். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். எண்ணற்ற மகிழ்ச்சி கிடைக்கும். இல்லத்தில் சந்தோஷம் பொங்கும். காதல் கைகூடி இன்பத்தைக் கொடுக்கும். உற்சாகத்தை கொடுக்கும். மாணவர்களுக்கு போட்ட திட்டங்கள் யாவும் பூர்த்தியாகும். மேற்கொண்ட முயற்சியில் வெற்றி இருக்கும். மாணவர்கள் தைரியமாக எந்த ஒரு காரியத்திலும் ஈடுபட முடியும். சுறுசுறுப்பாக இயங்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்