Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! பிரச்னைகள் சரியாகும்….! தடைகள் விலகும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! நல்ல வருமானம் இருக்கும்.

இன்று குடும்பத்தோடு போகும் இன்ப சுற்றுலா இனிமையைக் கொடுக்கும். வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் கழிப்பதற்கான சூழல் இருக்கும். நல்ல வருமானம் இருக்கும். நல்ல நண்பர்களை சந்திப்பீர்கள். உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். மனம் இன்று அலை பாய்ந்தாலும் ஓரளவு எல்லாம் உங்களுக்கு ஏற்றார் போலவே நடக்கும். மனதிற்குள் மகிழ்ச்சிக்கு குறைவில்லை. எதிர்பாராத தனவரவு கிடைக்கும். கடந்த இரண்டு மூன்று நாட்களாக இருந்த சிரமங்கள் அனைத்தும் விலகிவிடும். துணிச்சலுடன் எந்தவொரு பணியிலும் ஈடுபடுவீர்கள். மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் சரியாகும். தொழிலில் உள்ள பிரச்னைகளும் சரியாகும். தடைகளும் கண்டிப்பாக விலகிச்செல்லும். சிலருக்கு முன்னோர் சொத்துக்கள் கையில் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.

உங்களுடைய பேச்சு குடும்பத்தார் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரக்கூடிய சூழல் இருக்கும். சாதக பலனை உங்களால் நிலைநாட்ட முடியும். காதல் எந்த வகையிலும் தொல்லை கொடுக்காது. காதல் மகிழ்ச்சியை கொடுக்கும். மனதிற்கு பிடித்தவரை கரம்பிடிக்க கூடிய சூழல் இருக்கும். மாணவர்களுக்கு தெளிவான சிந்தனை இருக்கும். விளையாட்டு துறையில் சாதிக்க கூடியவர்களாக இருப்பீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை  கொடுக்கும். அப்படியே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 5                                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீலம்

Categories

Tech |