விருச்சிகம் ராசி அன்பர்களே.! அனுகூலமான பலன் கண்டிப்பாக இருக்கும்.
இந்த வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும். பாராட்டும் புகழும் அதிகரிக்கும். இல்லம் தேடி நிறைய தகவல்கள் வரும். உத்தியோக உயர்வு உறுதியாகும். வரன்கள் வாயில் தேடி வரும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். எதிர்பார்த்த கடனுதவிகள் தங்கு தடையின்றி கிடைப்பதால் தொழிலில் நல்ல அபிவிருத்தி பெருகும். புதிய கூட்டாளிகள் ஒன்று சேர்வார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வட்டாரத்தில் லாபம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்ல வேண்டும். பணவரவு நல்லபடியாக இருக்கும். இன்று சிறப்பாக செயல்பட்டு எதையும் சாதிக்கக்கூடிய வல்லவர்களாக இருப்பீர்கள். அனுகூலமான பலன் கண்டிப்பாக இருக்கும்.
தடைபட்ட திருமணம் இப்பொழுது மீண்டும் நடக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். எல்லா விதமான நன்மையும் நடக்கும். மனக்கட்டுப்பாட்டுடன் செயல்படுவீர்கள். மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை எண்ண வேண்டாம். காதலில் உள்ளவர்களுக்கு மிகவும் நல்ல நாள். காதல் சிறப்படையும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். கல்வியில் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 8 அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள்