Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! கவனம் தேவை….! பொறுமை வேண்டும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! பொறுமையாக இருக்க வேண்டும்.

இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். அடுத்தவர் கூறுவதை யோசித்துப் பார்த்து அதன் பிறகு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டும். அவர்கள் சொல்கிற கருத்தை கூர்மையாக கவனித்து செயல்படவேண்டும். கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டியிருக்கும். பிரச்சனைகள் சரியாகும். உடல்நிலை சரியில்லாமல் போகலாம். உங்கள் வசம் உள்ள ஆவணங்களை கவனமாக வைத்துக்கொள்ளுங்கள்.

சொத்து விவகாரங்களில் தலையிடும் போது கவனம் வேண்டும். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். பொறுமை தேவை. காதலில் உள்ளவர்கள் எந்த பிரச்னையாக இருந்தாலும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். கோபத்தை ஏற்படுத்தி உங்களுக்கான நஷ்டத்தை நீங்களே ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். மாணவர்களுக்கு செயல்திறன் அதிகரிக்கும். கல்வி பற்றிய அக்கறை இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று ஆஞ்சநேயர் வழிபாட்டையும் சூரிய பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்தவொரு பணியில் ஈடுபட்டாலும் வெற்றி நிச்சயம்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு                                                                                                            அதிர்ஷ்டமான எண்:   7 மற்றும் 9                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளம் பச்சை

Categories

Tech |