விருச்சிகம் ராசி அன்பர்களே.! சுற்றத்தாரின் உதவிகள் கிட்டும்.
இன்று சுகங்களும் சந்தோஷங்களும் வந்து சேரும். சுற்றத்தாரின் உதவிகள் கிட்டும். பண வரவும் வெற்றிகரமாக இருக்கும். கடந்த சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியம் கண்டிப்பாக நடக்கும். எதையும் துரிதமாக செயல்பட முடியும். உற்சாகமாக செயல்பட முடியும். வாக்குறுதிகளை பூர்த்தி செய்து கொடுக்க முடியும். திடீர் பயணம் தித்திக்க வைக்கும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டாலும் கொஞ்சம் விட்டுக் கொடுத்து சென்றால் எல்லாம் சரியாகிவிடும். தேவை இல்லாத காரியங்களை பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். உங்களுடைய மன வருத்தத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டாம். சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லக் கூடிய சூழ்நிலை இருக்கின்றது. புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பணம் வரவு கண்டிப்பாக வந்துவிடும்.
மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய எண்ணமும் இருக்கின்றது. இன்று குடும்பத்தைப் பொறுத்தவரை சகோதர ஒற்றுமை பலப்படும். வெகு நாட்களாக மனதில் போட்டு குழப்பிக் கொண்டிருந்த காரியம் இப்போது நிறைவேறி விடும். குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகள் எல்லாம் நீங்கிவிடும். காதலில் சிறு பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. விட்டுக்கொடுத்து சென்றால் காதல் மென்மேலும் முன்னேற்றத்தை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயங்கள் விலகிச் சென்றுவிடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியமும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: இளம் பச்சை மற்றும் நீலம்