Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! ஒற்றுமை இருக்கும்….! முயற்சி தேவை….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! நல்ல நேரங்கள் ஆரம்பித்துவிட்டது. 

இன்று நண்பரின் மனம் நிறைந்த வாழ்த்து உங்களுக்கு கிடைக்கும். திட்டமிட்ட செயல்களை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் வளர்ச்சி ஏற்படும். தாராள பணவரவு இருக்கும். சேமிக்கக்கூடிய எண்ணங்கள் இருக்கும். பெண்களுக்கு வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். கருத்து வேற்றுமை நீங்கி விடும். சோதனையான நாட்கள் எல்லாம் இப்பொழுது சாதனையாக மாறக்கூடும். பணவரவு தாராளமாக வந்துவிடும். சொன்ன சொல்லை காப்பாற்ற முடியும். நல்ல நேரங்கள் ஆரம்பித்துவிட்டது. முயற்சி எடுங்கள் முன்னேறி விடலாம்.

எடுக்கக்கூடிய முடிவுகளில் தெளிவு வேண்டும். குழப்பங்கள் இருந்தால் பெரியோர்களிடம் ஆலோசனை செய்ய வேண்டும். காதல் உள்ளவர்களுக்கு சின்ன சின்ன சிக்கல்கள் வரும். அதனை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் தைரியமாக இருக்க வேண்டும். முடிவுகள் எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                    அதிர்ஷ்டமான எண்:   7 மற்றும் 9                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் நீலம்

Categories

Tech |