விருச்சிகம் ராசி அன்பர்களே.! சில இடத்தில் காலதாமதம் ஏற்படும்.
இன்று இன்பமும் துன்பமும் கலந்து உங்களுக்கு காணப்படும். இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதி கூடும் நாளாக இருக்கும். உத்தியோக மாற்றம் உறுதியாக கூடும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறி உங்களுடைய கூட்டு முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். எடுத்த முயற்சிகள் அனைத்தும் கைகூடும். வரவுக்கேற்ற செலவுகள் இருக்கும். எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் இருக்கும். மனோ தைரியமும் கூடும். மற்றவர்களால் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். பார்த்து பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். திடீர் கோபத்தை விட்டுவிடவேண்டும். செயலை சிறப்பாக செய்யக்கூடிய ஆற்றல் இருக்கின்றது. பொறுப்பாக எதிலும் ஈடுபட வேண்டும். அலட்சியம் இருக்கக்கூடாது. சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எண்ணற்ற மகிழ்ச்சிகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். சில இடத்தில் காலதாமதம் ஏற்படும்.
தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து நீங்கள் தான் முன்னேறிச் செல்ல வேண்டும். சிலருக்கு உத்தியோக மாற்றம் மனதிற்கு எண்ணற்ற மகிழ்ச்சியை கொடுக்கும். காதல் விவகாரங்கள் மாற்றத்தை கொடுக்கும். காதலின் நிலைபாடுகள் வெற்றியை கொடுக்கும். கண்டிப்பாக சந்தோஷமான வாழ்க்கை உங்களுக்கு அமையக்கூடும். பெரிய பிரச்சனைகள் எதுவும் இருக்காது. மாணவர்களுக்கு துணிச்சல் கூடும். கல்வி மீது அக்கறை இருக்கும். கல்வியில் நீங்கள் சாதிக்க கூடிய அமைப்பு இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது அடர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: அடர் நீலம் மற்றும் பச்சை