Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! எதிர்ப்புகள் விலகும்….! எச்சரிக்கை வேண்டும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! திட்டங்களை நிறைவேற்றுவதில் முயற்சி எடுக்க வேண்டும்.

இன்று விவாகப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். விரோதிகள் விலகிச் செல்வார்கள். எதிர்ப்புகள் இல்லாமல் இருக்கும். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றி கிடைக்கும்.  நண்பர்கள் உங்களுக்கு கை கொடுத்து உதவி செய்வார்கள். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். எப்படிப்பட்ட சூழலையும் சிறப்பாக உங்களால் செய்ய முடியும். எல்லாம் நல்லபடியாக நடக்கும். தீவிர முயற்சி எடுத்தால் சில காரியங்களில் மிகச் சிறப்பாக முடிப்பீர்கள். இல்லத்தில் கோபங்கள் வரக்கூடிய அளவில் சூழல்கள் இருக்கும். யாரையும் எதிர்த்து பேச வேண்டாம். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். எச்சரிக்கையாக இருப்பது எப்பொழுதும் நல்லது. சில நேரங்களில் ஞாபக மறதியினால் சில பொருட்களை வேறு எங்கேயோ வைத்துவிட்டு வேறு எங்கேயோ தேடி கொண்டிருப்பீர்கள்.

அதுபோல தொலைந்து போன பொருட்கள் வந்து சேர்வதற்கான சூழல்கள் இருக்கும். விழிப்புடன் இருக்க வேண்டும். திட்டங்களை நிறைவேற்றுவதில் கொஞ்சம் முயற்சி எடுக்க வேண்டும். கண்டிப்பாக எல்லாம் உங்கள் பக்கம் இருக்கும். காதல் சில நேரங்களில் வருத்தத்தை கொடுக்கும். ஒரு சில நேரத்தில் சந்தோஷத்தை கொடுக்கும். காதலில் நீங்கள் சரியான முறையில் புரிந்து கொண்டு அனுபவிக்கும் போதுதான் வீட்டில் இருக்கும். மாணவர்கள் படிப்பை தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த வேண்டாம். விளையாட்டுத் துறையில் கவனம் செலுத்த வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள். கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:  1 மற்றும் 6                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் வெளிர் சிவப்பு

Categories

Tech |