விருச்சிகம் ராசி அன்பர்களே.! கடன் பிரச்சனைகள் எல்லாம் கட்டுக்குள் இருக்கும்.
இன்று பரபரப்பு நீங்கி முன்னேற்றம் ஏற்படக் கூடிய நாளாக இருக்கின்றது. நல்ல வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். நண்பர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். தொழிலில் வளர்ச்சி நல்லபடியாக இருக்கும். திருப்தியான சூழல் இருக்கும். இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதி ஏற்படும். உத்யோக அனுகூலம் உண்டாகும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறி உங்களுடைய கூட்டு முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். கோபம் படபடப்பு குறைந்து விடும். திடீர் செலவுகள் ஏற்படும். புதுப்புது முயற்சிகள் எடுத்து வாழ்க்கையில் வெற்றி கொள்வதற்கான திட்டங்கள் இருக்கின்றது. வாழ்க்கையில் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்ற எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும். கடன் பிரச்சனைகள் எல்லாம் கட்டுக்குள் இருக்கும்.
வருமானத்தை பெருக்குவதில் குறிக்கோளாக இருப்பீர்கள். பிரச்சினைகள் ஓரளவு சரியாகி முன்னேற்றத்தைக் கொடுக்கும். அதே போல் காதலில் உள்ளவர்களுக்கு மனதில் நிம்மதி ஏற்படும். காதல் எப்படியும் கைகூடி விடும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். காதலில் பெரிய பிரச்சினைகள் இருந்தாலும் மாலை நேரத்தில் எல்லாம் சரியாகிவிடும். மாணவர்களுக்கு உயர்கல்வி பற்றிய எண்ணங்கள் மேலோங்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை