விருச்சிகம் ராசி அன்பர்களே.! சுறுசுறுப்பாக இயங்க முடியும்.
இன்று புதிய முயற்சியில் கண்டிப்பாக வெற்றி கிடைக்க பொறுமை தேவைப்படும். பொறுமையுடன் சில காரியங்களை நீங்கள் அணுக வேண்டும். வழக்கமாக செய்யக்கூடிய பணியை நீங்கள் கொஞ்சம் மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். வரவு வரக்கூடிய வேலையில் மட்டும்தான் கவனம் செலுத்துவீர்கள். தேவையில்லாத விவகாரங்களில் தலையிட்டு உங்களுடைய நேரத்தை நீங்கள் கெடுத்துக் கொள்ள மாட்டீர்கள். புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுப்பீர்கள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். இன்று சிறந்த எண்ணங்கள் இருக்கும். இன்று முன்னேற்றகரமான சூழல் இருக்கும். கலைத்துறையில் வெளிநாட்டு பயணங்கள் செல்வதற்கான சூழல் உருவாகும். எதிர்பார்த்ததைவிட கூடுதல் செலவு இருக்கும். தொழிலில் இருந்த தொய்வு நீங்கி முன்னேற்றமடைய கூடும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தாமதமானாலும் வந்து சேரும். செயலில் வேகம் கூடும். சுறுசுறுப்பாக இயங்க முடியும்.
காதலில் சின்ன பிரச்சனைகள் இருந்தாலும் அதனை நீங்கள் முன்கூட்டியே சரி செய்து கொள்ள வேண்டும். அதனை வளர விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காதலில் உள்ளவர்கள் அவசியம் நேரும் பட்சத்தில் மட்டும்தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். தேவையில்லாத விஷயங்களைப் பேசி மனதை காயப்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் பொறுப்பானவர்கள். கல்வி மீது அக்கறை இருக்கும். மாணவர்கள் இன்று சிறப்பாக செயல்பட முடியும். இன்று முக்கியமான பணிகளை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள்