Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! எச்சரிக்கை வேண்டும்….! அனுசரணை வேண்டும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! அனைவரையும் அனுசரித்து செல்ல வேண்டும். 

இன்று நுட்பமான வேலைகளை சிறப்பாக செய்தாலும் நல்ல பெயர் என்பது கண்டிப்பாக இருக்காது. உங்களுடைய கடுமையான உழைப்பை மற்றவர்கள் விமர்சனம் செய்வார்கள். அதுபோல நீங்களும் வருமானம் வரக்கூடிய வேலைகளை மட்டும் செய்ய வேண்டும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டும். பயணத்தில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். அனைவரையும் அனுசரித்து செல்ல வேண்டும். பணவரவு ஓரளவு இருக்கின்றது. காரியத்தடை தாமதம் விலகிச்செல்லும். எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். உழைப்புக்கேற்ற தனவரவு இருக்கும். அந்நிய மொழி பேசுபவர்களால் உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உறவினர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து விடும். உடல் ஆரோக்கியம் நல்லபடியாக இருக்கும். மனதிற்குள் சந்தேக உணர்வு ஏற்பட்டால் அதனை உரிய நபரிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

உயரிய எண்ணங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். திருமண தடைகள் விலகி செல்லும். சுபகாரிய பேச்சுகள் நல்ல விதத்தில் நடக்கும். புத்தி சாதுரியம் வெற்றியை கொடுக்கும். கையில் காசு புரளும் கொடுத்த வாக்கை எப்படியாவது காப்பாற்றி விடவேண்டும் என்ற எண்ணத்திலேயே உங்களுடைய செயல்பாடுகள் இருக்கும். காதலில் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காதலில் நிலைபாடுகள் கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தும். காதலில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு தன்னிச்சையாக எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு                                                                                                              அதிர்ஷ்டமான எண்:   3 மற்றும் 9                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை

Categories

Tech |