விருச்சிகம் ராசி அன்பர்களே.! போட்டிகள் விலகும்.
இன்று வாழ்க்கையில் வளம் பெற புதிய சூழல் உருவாகும். ஆர்வமுடன் ஒரு வேலையில் ஈடுபட முடியும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கின்றது. பண சேமிப்பு அதிகரிக்கும். செய்யக்கூடிய பணியில் முன்னேற்றம் இருக்கும். மறைமுகப் போட்டிகள் விலகிச்செல்லும். மறைமுக எதிர்ப்புகள் குறைந்துவிடும். எடுத்த காரியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும். அனைத்து விதமான கடினமான எதிர்ப்புகள் நீங்கி விடும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த அன்பு பெருகும். பிள்ளைகள் மூலம் பெருமை சேரும். சாமர்த்தியமான பேச்சு மூலம் காரியத்தை சிறப்பாக செய்ய முடியும். காதலில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
காதல் கசக்கும் படியாக இருக்கும். மன வருத்தத்தை கொடுக்கும். மாணவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் உண்டு. கல்வியில் நீங்கள் எடுத்த முயற்சி கண்டிப்பாக முன்னேற்றம் இருக்கும். பெரியோர்களை மதித்து நடக்க வேண்டும். மேற்கல்விகாண முயற்சியில் வெற்றி கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று ஆஞ்சநேயர் வழிபாட்டையும் சூரிய பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள்