விருச்சிகம் ராசி அன்பர்களே.! எல்லா விதமான வசதி வாய்ப்புகளும் கிடைக்கும்.
இன்று உறவினர்களின் அன்பும் ஆதரவும் நல்லபடியாக கிடைக்கும். தாமதமான பணியை கூட புதிய உத்தியால் நிறைவேற்றி விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உபரி பண வருமானம் கிடைக்கும். வருமானத்தை பெருக்கிக் கொள்வீர்கள். கலைத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காத்திருக்கின்றது. கலையம்சம் நிறைந்த பொருட்களை வாங்க கூடிய சூழல் இருக்கின்றது. ஆடம்பரப் பொருட்களை வாங்க வேண்டிய சூழலும் இருக்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும். எதிர்பார்த்த நிதியுதவி கண்டிப்பாக கிடைக்கும். தொழிலுக்காக கொஞ்சம் அலைய வேண்டிய சூழல் இருக்கின்றது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத மாற்றங்கள் வரக்கூடும். எல்லா விதமான வசதி வாய்ப்புகளும் கிடைக்கும்.
நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிரச்சனைகள் இல்லை. மனம் மகிழும் படியான சூழல் கண்டிப்பாக இருக்கின்றது. திட்டங்கள் சிறப்பாக நடைபெறும். காதலில் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். உற்சாகமாக இருப்பீர்கள். காதலித்தவரையே கரம் பிடிக்க கூடிய சூழல் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை இருக்கும். கல்வியில் உங்களால் சாதிக்க முடியும். கல்வியில் எதிர்பாராத திருப்பங்களும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்