Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! செலவு அதிகரிக்கும்…..! நிதானம் வேண்டும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! பேச்சில் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

இன்று வளர்ச்சி கூட இஷ்ட தெய்வங்களை வழிபட வேண்டும். முயற்சியில் வெற்றி கண்டிப்பாக இருக்கும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும். வாக்கு வன்மையால் காரியத்தில் அனுகூலமும் கிடைக்கும். வாகனம் வீடு ஆகியவற்றில் செலவு ஏற்படும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. ரகசியங்களை பாதுகாத்துக் கொண்டால் எல்லா விதமான நன்மைகள் ஏற்படும். அவசரப்பட்டு விட்டால் தேவையில்லாத பிரச்சனைகள் வரும். குடும்பத்தைப் பொருத்தவரையில் மூத்த சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். கணவன்-மனைவிக்கிடையே சின்ன விஷயமாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.

காதல் விவகாரங்கள் கஷ்டத்தை கொடுக்கும். காதலில் சரியான புரிதல் இல்லாமல் இருக்கும். குழப்பமான மனநிலை இருக்கும். இந்த காதல் சரி வருமா வராதா என்ற எண்ணங்கள் உங்களை வாட்டிக் கொண்டிருக்கும். மாணவர்களுக்கு கடுமையான பணிச்சுமை இருக்கும். பெற்றோர்களின் சொல் பேச்சு கேட்டு நடக்க வேண்டும். எடுக்கின்ற முயற்சியில் அனைவரிடமும் ஆலோசனை கேட்டு நடக்க வேண்டும். இன்று முக்கியமான பணியினை நீங்கள் மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்தவொரு பணியிலும் ஈடுபட்டு வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு                                                                                                              அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 7                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பிங்க்

Categories

Tech |