விருச்சிகம் ராசி அன்பர்களே.! சுமுகமான சூழல் கண்டிப்பாக இருக்கும்.
இன்று நல்ல செயலுக்கு உரிய பலன் கண்டிப்பாக தேடி வரும். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை ஏற்படும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கூடிய சூழ்நிலை இருக்கும். கலைத்துறையில் உங்களால் சாதிக்க முடியும். அறிமுகம் இல்லாதவரிடம் தயவுசெய்து அதிகமாக பேச வேண்டாம். தொழில் வியாபாரத்திற்காக நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். பணவரவு சுமாராக இருக்கும். மனதிற்கு பிடித்தமான இடத்திற்கு செல்ல கூடும். மனக்கஷ்டம் பணக்கஷ்டம் சரியாகும். சிலருக்கு வசதியான வீடு வாய்ப்புகள் அமையக்கூடும். முன்னோர் சொத்துக்கள் உங்களுடைய கைக்கு வந்து சேரும். பிரச்சினையாக இருந்த சில விஷயங்களில் கூட பிரச்சனை நின்றுவிடும். சுமுகமான சூழல் கண்டிப்பாக இருக்கும். எதிரிகளின் தொல்லை குறையும்.
தொழில் வியாபாரம் ஆகியவற்றில் ஏற்பட்ட தொய்வு நிலை மாறிவிடும். சுதந்திரமான எண்ணங்கள் இருக்கும். காதலில் உள்ளவர்களின் நிலைப்பாடுகள் கொஞ்சம் கசக்கும். சில இடங்களில் பிரச்சனையாக இருக்கும். அதனை நீங்கள் சரிசெய்து கொள்ள வேண்டும். கொஞ்சம் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். காதலர்களுக்குள் பிரச்சனை அதிகமாக வரும். மாணவர்கள் தைரியமான முடிவை எடுக்க வேண்டும். கல்விக்காக முக்கிய முடிவை எடுக்கும்போது பெரியோரிடமும் ஆலோசனை கேட்டு செய்ய வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் அடர் மஞ்சள்