விருச்சிகம் ராசி அன்பர்களே.! திட்டங்கள் யாவும் வேகம் பிடிக்கும்.
இன்று நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகும். முக்கியமாக நேற்று நடந்த பிரச்சனைகள் எல்லாம் இன்று சரியாக கூடும். குடும்பத்தாருடன் செல்லும் உல்லாசமான சுற்றுலா பயணங்களால் மனம் சந்தோஷமாக இருக்கும். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகப் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும். தொடங்கிய வேலைகளை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருந்த நிலை இப்பொழுது மாறிவிடும். திட்டங்கள் யாவும் வேகம் பிடிக்கும். உங்களுடைய தொழில் சூடுபிடிக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள். அது உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும். அரசாங்க பணிகள் அனைத்தும் தொய்வில்லாமல் சிறப்பாக நடக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். பெண்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். திருமணத்தை பற்றி வீட்டில் பேச வேண்டும். கண்டிப்பாக திருமணத்தை முடித்துக் கொள்ளுங்கள். மாணவர்களுக்கு இன்றைய நாளில் உற்சாகம் இருக்கும். ஆனால் செயல்களில் குழப்பம் இருக்கும். பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் கேட்டு குழப்பத்தை தீர்த்து கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீலம்