விருச்சிகம் ராசி அன்பர்களே.! சுமுகமான சூழல் இருக்கும்.
கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக அமையும். நல்ல கல்வி அறிவு இருக்கும். நல்ல புத்தி கூர்மை இருக்கும். எழுத்துத்துறையில் வெற்றி கொள்ள முடியும். ஜோதிடம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் செல்லும். எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக முடிவெடுப்பீர்கள். சிலருக்கு புதிய வாகனம் வாங்க கூடிய அம்சம் இருக்கின்றது. பொருளாதாரத்தை கண்டிப்பாக உயர்த்திக்கொள்ள முடியும். குடும்பத்தில் சுமுகமான சூழல் இருக்கும். உறவினர் வருகை இருக்கும். நிதானமாக பேச வேண்டும். அனுபவம் இருக்கும். அனுபவம் மூலம் நல்ல முடிவுகளை எடுக்க முடியும். தடைபட்ட சுபகாரியங்கள் தடபுடலாக நடக்கும்.
தொலைதூரத்திலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். எதிரிகள் தொல்லை அகலும். காதல் கைகூடி ஆனந்தத்தைக் கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்வில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் இளம் மஞ்சள்