விருச்சிகம் ராசி அன்பர்களே.! குடும்பத்தாரிடம் அன்பாக பேச வேண்டும்.
இன்றைய நாள் கொஞ்சம் நீங்கள் யோசித்து செயல்பட வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது கவனம் வேண்டும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். மறதியால் சில பிரச்சனைகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது சிந்தித்து செயல்பட வேண்டும். உத்யோகத்தில் உள்ளவர்கள் எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்படக்கூடிய சூழல் இருக்கும். அதற்காக குடும்பத்தை விட்டுப் பிரியக் கூடிய சூழல் இருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டும். தொழில் ரீதியாக சில பயணங்கள் செல்லும்போது உடமைகள் மீது கவனம் வேண்டும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது படித்து பார்த்துவிட்டு கையெழுத்து போட வேண்டும். தேவையில்லாத விவகாரங்களில் தலையிட வேண்டாம். பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.
குடும்பத்தாரிடம் அன்பாக பேசவேண்டும். குடும்பத்தில் உள்ள பெண்களிடம் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு சிரமங்கள் இல்லாமல் செல்லும். ஆனால் பின்னர் வாக்குவாதங்கள் ஏற்படும். அனுசரித்து செல்ல வேண்டும். மாணவர்களுக்கு இன்றைய நாளில் தைரியம் கூடும். மாணவர்கள் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யக்கூடியவர்களாக இருப்பீர்கள். மாணவர்கள் எதையும் சிந்தனை செய்து காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது கருநீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கரு நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் கருநீலம்