விருச்சிகம் ராசி அன்பர்களே.! எதை தொட்டாலும் வெற்றி நிச்சயம்.
இன்று உறவுகளுக்கு இடையே மனக்கசப்புகள் கொஞ்சம் உருவாகும். முறையற்ற வழிகளில் பணம் வரலாம். அதேபோல் முறையற்ற வழியில் பணம் செலவு செய்யலாம். கோபத்தை குறைத்தால் நன்மை ஏற்படும். வழக்குகளை ஒத்திப் போடுவது நல்லது. அடுத்தவருடன் ஏற்பட்ட பிரச்சனைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றி கிடைக்கும். பணவரவு இருக்கும். எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை நம்புவதில் எச்சரிக்க வேண்டும். தீ, நெருப்பு, ஆயுதங்கள் போன்றவற்றை பயன்படுத்தும் போது கவனம் வேண்டும். மனம் மகிழும் படியான சம்பவங்கள் நடக்கும். வாய்ப்புகள் வந்து குவியும். கடமை தவறாமல் எந்த ஒரு வேலையிலும் ஈடுபடுவீர்கள். செல்வம் சேர்த்து விடுவீர்கள். செல்வாக்காக இருப்பீர்கள். எதை தொட்டாலும் வெற்றி நிச்சயம். கவலைப்பட வேண்டாம். சுறுசுறுப்பை மட்டும் குறைத்துக் கொள்ள வேண்டாம். உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு சுய கட்டுப்பாடு வேண்டும். பெண்கள் சுய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வமாக இருப்பீர்கள். யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம். காதல் விவகாரங்கள் கஷ்டத்தை கொடுக்கும். புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் காதல் கை கூடும். காதலில் கொஞ்சம் விட்டு பிடிக்க வேண்டும். மாணவர்கள் தெளிவாக இருக்க வேண்டும். தெளிவான சிந்தனையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பொறுப்பாக இருந்து எதிலும் ஈடுபட்டு வெற்றி கொள்ள வேண்டும். அவசரப்பட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 1 மட்டும் 7 அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள்