விருச்சிகம் ராசி அன்பர்களே.! உறவினர்களிடம் அன்பு பாராட்டுவது நல்லது.
இன்று தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கல்யாண முயற்சிகள் கண்டிப்பாக பலிக்கும். புது வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் இருக்கும். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். தொழிலில் புதிய யுக்திகளை கையாண்டு வெற்றிகரமாக வழி நடத்திச் செல்வீர்கள். உங்களுடைய கருத்தில் ஆதாயம் இருக்கும். ஆரோக்கியம் கிடைக்கும். நினைத்ததை முடிக்க முடியும். புத்திர வழியில் சில மனசஞ்சலங்கள் தோன்றினாலும் அதுவும் முன்னேற்றத்தை கொடுக்கும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். பிள்ளைகளுடைய வாழ்க்கை தரம் உயரும். உறவினர்களிடம் அன்பு பாராட்டுவது நல்லது. உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை நீங்கள் செய்து கொள்வீர்கள்.
தேவைகள் யாவும் பூர்த்தியாகும். அதிகப்படியான கோபம் வெளிப்படும். அதனை நீங்கள் சரி செய்து கொள்ள வேண்டும். பெண்களுக்கு சில காரியங்களில் அதிகப்படியான முயற்சிகள் வேண்டும். அப்போதுதான் காரியத்தில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு சிறு முயற்சிகள் இருக்கும். காதல் எந்த ஒரு பிரச்சனையையும் கொடுக்காது. பிரச்சினையாக இருந்த காதல் கூட இப்பொழுது சரியாகும். தைரியமாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள்