விருச்சிகம் ராசி அன்பர்களே.! வேலை பளு அதிகமாக இருக்கும்.
இன்று குடும்பத்தினரின் ஆலோசனையை ஏற்று நடக்க வேண்டும். திட்டமிட்ட பணிகள் சிறப்பாக நடக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்குகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்குவார்கள். கடன்காரர்கள் தொல்லை கொடுப்பார்கள். பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். தெளிவான பார்வையும் கம்பீரமான தோற்றமும் அழகான பேச்சாற்றலும் இருக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரித்து உடல்நிலை சோர்வடையும். உடல் சோர்வாக இருப்பதினால் சிந்தனை கூட மந்தமாக இருக்கும்.
தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் உபரி வருமானம் வந்து சேரும். குடும்பத்தில் சகோதர சகோதரிகளிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். தேவையில்லாமல் எந்த ஒரு வார்த்தைகளையும் பேச வேண்டாம். கணவன்-மனைவி இருவரும் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். வார்த்தைகளில் தெளிவு நிதானம் வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியை நீங்கள் மேற்கொண்டாலும் வெற்றி நிச்சயம்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீலம்