Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! சாமர்த்தியம் இருக்கும்….! வெற்றி கிடைக்கும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! வருமானத்தை உயர்த்துவதற்கான திட்டங்கள் இருக்கும்.

இன்று வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்கும் நாளாக இருக்கும். ஊர் மாற்றச் சிந்தனை மேலோங்கும். உறவினர் பகை அகலும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். பூர்வீக சொத்தில் இழுபறியான நிலை தொடரும். கொஞ்சம் நம்பிக்கையுடன் ஈடுபட வேண்டும். தொழில் மந்தமாக இருக்கும். ஆனால் வருமானத்திற்கு குறைவிருக்காது. கொடுக்கல் வாங்கலில் சிக்கலான சூழ்நிலை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். மற்றவர் மீது இரக்கம் காட்டுவீர்கள். இரக்கம் காட்டுவது தவறில்லை அதனைப் பயன்படுத்தி மற்றவர்கள் உங்களிடம் தேவையில்லாத உதவிகளை பெறுவார்கள். எதையும் யோசித்துச் செய்யவேண்டும். சாமர்த்தியம் இருக்கும். செலவுகளை நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். வருமானத்தை உயர்த்துவதற்கான திட்டங்கள் இருக்கும்.

உறவினர் வகையில் உறவுகள் கண்டிப்பாக இருக்கும். நீங்க கேட்ட இடத்தில் உதவிகள் கிடைப்பதில் கண்டிப்பாக காலதாமதம் இருக்கும். பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். காதல் கூட இழுபறியான சூழ்நிலையை ஏற்படுத்தும். நீங்கள் விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். பிரச்சனைகளை பெரிதாக்கிக் கொள்ள வேண்டாம். மாணவர்களுக்கு கல்வி மீது அக்கறை இருக்கும். கல்வியில் எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்ற எண்ணங்கள் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பின்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 5                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் பிங்க்

Categories

Tech |