விருச்சிகம் ராசி அன்பர்களே.! நேர்மையான எண்ணங்கள் பிரதிபலிக்கும்.
இன்று இதமாகப் பேசி எல்லோரையும் கவர்ந்து விடுவீர்கள். முக்கியமான பணி உங்களுக்கு சிறப்பாக நிறைவேறும். தொழில் நலன் கருதி முக்கிய முடிவுகளும் எடுக்க முடியும். நேர்மையான எண்ணங்கள் பிரதிபலிக்கும். புண்ணிய காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் சரியாகி விடும். வியாபாரத்தில் வருகின்ற லாபம் தடைபடாது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரக்கூடிய வருமானத்திற்கு தாமதம் வந்தாலும் அவை உங்களுக்கு சிறப்பான முறையில் நிறைவேறிவிடும். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். குடும்பத்திலும் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.
தாய் தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். தந்தையிடம் வாக்குவாதம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மனதில் உறுதி தன்மை இருக்கும். காதல் பிரச்சனையை ஏற்படுத்தாது. சந்தோஷத்தை ஏற்படுத்தும். மனதிற்கு பிடித்தவரை கரம்பிடிக்க கூடிய சூழலை உருவாக்கி கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வி மீது அக்கறை இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் வெற்றி நிச்சயம்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை