Categories
அரசியல்

தமிழ் மக்கள் மட்டும் இளிச்சவாயா….? மோடிப்பொங்கல் எதற்காக….? விருதுநகர் எம்பி ஆவேசம்….!!

விருதுநகரின் நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூர், பொங்கலை மட்டும் எதற்காக மோடியின் பெயருடன் இணைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

விருதுநகரின் நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூர், மதுரையில் தன் அலுவலகத்தில் வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்தபோது தெரிவித்திருப்பதாவது, பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வருவதை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவது தொடர்பில் அவருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன்.

எனவே, சர்வதேச விமான நிலையமாக மதுரை விமான நிலையத்தை மாற்ற தீர்மானித்து, வரும் 12ஆம் தேதி அன்று மோடி மதுரைக்கு வரும்போது, நம் மக்களுக்கு பொங்கல் பரிசாக அதனை கொடுக்கவேண்டும் என்று கேட்டிருக்கிறேன். விஜயதசமி மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகளை மோடியின் பெயருடன் சேர்த்து கொண்டாடுவார்களா?

அப்படி இருக்கும்போது தமிழர்கள் மட்டும் இளிச்சவாயா? அவர்கள் மட்டும் எதற்காக “மோடி பொங்கல்” என்று கொண்டாட வேண்டும்? தை மாதத்தில் வரும் பொங்கலை மார்கழி மாதத்தில் கொண்டாடுவது போல நகைச்சுவை வேறு ஒன்றுமில்லை. இது கவலைக்குரியது. மோடியின் வருகையை செல்லூர் ராஜூ எதிர்க்கிறார்.

தமிழக அரசின் முயற்சிக்கு, மத்திய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், கோ பேக் மோடி என்று ஹேஸ் டேக் வைரலானது. அதனை அப்போது திமுக அரசும் ஆதரித்தோம். ஆனால் இப்போது, கோ பேக் மோடி என்று கூறுவது நியாயமாகுமா? ஆட்சியிலுள்ள திமுக அரசின் நோக்கம் மக்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுப்பது தான். இதை செல்லூர் ராஜா போன்ற முன்னாள் அமைச்சர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |