விருதுநகரில் மேலும் 9 பேருக்கு நேற்று கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 3 லட்சத்து 77 ஆயிரத்து 999 பேருக்கு நேற்று முன்தினம் வரை கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு இருந்தது. அதில் 16 ஆயிரத்து 497 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் 16 ஆயிரத்து 198 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 69 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப் படுத்தப் படவில்லை. இந்நிலையில் நேற்று மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 16506 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் பொதுவாக பல மாவட்டங்களில் பரிசோதனை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனை சரி செய்து முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் மாவட்ட சுகாதாரத் துறையினர் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள தயாராக இல்லை. எனவே பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் இதுகுறித்து தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.