Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விருதுநகரில் கொரோனா…. 7 பேர் பாதிப்பு…. அதிகரித்த எண்ணிக்கை…!!

விருதுநகரில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா  தொற்றினால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் கோரோனவால் பாதிக்கப்பட்டு 16,517 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார்கள். இதில் 72 ஆயிரத்து 757 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை பெறுவோர் 99 பேர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்த படவில்லை. இதனிடையே மேலும் ஏழு பேருக்கு நேற்று புதிதாக தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,252 ஆக உயர்ந்துள்ளது. 1708 பேருக்கு நேற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 2,500-க்கும் மேற்பட்டவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

பரிசோதனை முடிவுகள் அறிவிக்க தாமதம் ஏற்படுவதால் நோய் பாதிப்பு அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பரிசோதனை முடிவுகள் வெளியிட தாமதிக்காமல் உடனே அறிவிக்க சுகாதாரத்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டவுடன் அப்பகுதியை தாமதமின்றி கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |