Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சண்டையை தீர்க்க நினைச்சது குற்றமா….? நாட்டாமைக்கு நேர்ந்த கதி…. போலீஸ் விசாரணை….!!

சண்டையை தீர்க்க நினைத்த நாட்டாமையை மர்ம நபர்கள் அடித்து கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் ராஜபாளையம் பகுதியில் உள்ள குன்னக்குடி கிராமத்திற்கு அடுத்துள்ள செந்தட்டியபுரம் கிராமத்தில் வசிப்பவர் வள்ளிநாயகம். இவர் ஒரு விவசாயி மற்றும் அந்த ஊர் நாட்டாமையாகவும் இருந்து வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பொங்கல் விழாவின் போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் வள்ளிநாயகம் தலையிட்டு இரு தரப்பினருக்கும் சமரசம் செய்து வைத்துள்ளார். அதில் ஒரு தரப்பினர் தாக்க முயற்சித்ததால் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் வள்ளிநாயகம் புகார் செய்துள்ளார். அதன் பின்னர் இரு சக்கர வாகனத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதுதொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினரிடம் உறவினர்கள் புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து அவரை தேடியதில், குண்ணகுடி கிராமம் மெயின்ரோட்டில் அவரது இரு சக்கர வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் எங்கே என தேடியபோது முட்புதருக்குள் ரத்த காயங்களுடன் வள்ளிநாயகம் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் வள்ளிநாயகத்தின் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்துறை நடத்திய விசாரணையில் வள்ளிநாயகம் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 5 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |