கார்த்தி நடிக்கும் விருமன் திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி தற்போது முத்தையா இயக்கத்தில் விருமன் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் முதல்முறையாக அறிமுகமாக இருக்கிறார்.
ஏற்கனவே கார்த்தி- முத்தையா கூட்டணியில் உருவான கொம்பன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் அவர்கள் இணைந்திருப்பது இப்படத்திற்கான எதிர்ப் பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் விருமன் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் கார்த்தி, பருத்திவீரன் மற்றும் கொம்பன் திரைப்படத்தில் பார்த்தது போலவே இருக்கிறார்.